அரச மற்றும் அரச சார்புத்துறை சேவையில்

ஈடுபட்டுள்ளோர் தொடர்பான தொகைமதிப்பீடு 2016

அரச மற்றும் அரச சார்புத்துறை நிறுவனங்களில் தொழில் புரிவோரினது தொகைமதிப்பீடானது 17ம் திகதி நவம்பர் மாதம் 2016 இல் முற்பகல் 9:30 தொடக்கம் 11:30 வரை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. இத் தொகைமதிப்பீட்டின் போது அரச மற்றும் அரச சார்புத்துறைகளில் தொழில் புரிவோரது எண்ணிக்கை, அவர்களது சமூக மற்றும் பொருளாதார விபரங்கள் குறித்த திகதியில் சேகரிக்கப்படவுள்ளன. இத்தொகைமதிப்பீடு நாடளாவிய ரீதியில் நடைபெறும் அதேவேளை, நிறுவனச் சொத்துக்கள் தொடர்பான விபரங்களைப் பற்றிய விசாரணைகளும் நடைபெறவுள்ளன. இவ்வேலைத் திட்டமானது, தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் அரச துறைகளில் தரமான தகவல்களினை உறுதிப்படுத்துவதற்கும், எதிர்கால நடவடிக்கைகளின் திட்டமிடல்களுக்கு உதவுவதற்கும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், நீங்கள் வழங்குகின்ற தகவல்கள் இவ்வலைப்பக்கத்தினூடாக வெளியிடப்படவும் உள்ளன.

இவ்வலைப்பக்கத்தில், இத்தொகைமதிப்பீடு தொடர்பான அனைத்து ஆவணங்களினதும் மென்பிரதிகளை நீங்கள் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவிருக்கும். பயனர் ஒவ்வொருவரும், நீங்கள் வினாக்கொத்தினை நிரப்புவது தொடர்பான அறிவுறுத்தல்கள் மற்றும் காணொளிகளை இவ்வலைப்பக்கத்தின் மூலம் பயன்படுத்தமுடியும்.

ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இவ் அரச மற்றும் அரச சார்புத்துறைகளில் தொழில்புரிவோர் தொடர்பான தொகைமதிப்பீட்டின் வெற்றிகரத் தன்மையானது தங்களின் பங்களிப்பில் தங்கியிருப்பதுடன், இதனை ஓர் தேசிய ரீதியான செயற்பாடாகக் கொண்டு எதிர்கால செயற்பாடுகளைத் திட்டமிடுவதற்கு உதவும் ஓர் உன்னத பணியில் இணைந்து கொள்ளுமாறு தங்கள் அனைவரையும் தொகைமதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வேண்டிநிற்கின்றது.


இத்தொகைமதிப்பின் முக்கியத்துவங்கள்.

 • அரச நிறுவனங்களில் தொழில்புரிவோரது விபரங்கள் மட்டுமல்லாது நிறுவன சொத்துக்களின் விபரங்களும் திரட்டப்படவுள்ளன.
 • நாடளாவிய ரீதியில் அரச மற்றும் அரச சார்புத்துறை நிறுவனங்களில் தொழில்புரிவோரும் 17 ம் திகதி நவம்பர் 2016 ம் ஆண்டு காலை 9:30 முதல் 11:30 வரை நடைபெறும் இத்தொகைமதிப்பீட்டில் ஈடுபட்டிருப்பர்..
 • இதுவே முதன்முதலாக நடைபெறவுள்ள தொகைமதிப்பீடாகும்.
 • இலங்கையில் முதற்தடவையாக அரச சார்புத்துறை நிறுவனங்களின் கீழ், தோட்டங்களில் பணிபுரியும் களநிலை பணியாளர்கள் கூட இதில் கணக்கெடுக்கப்படவுள்ளனர்.
விசேட அறிவித்தல்கள் » 

தொழில்புரிவோர் விபரங்கள்

ஒரு பணியாளர் ஒரேயொரு வினாக்கொத்தினை மட்டுமே நிரப்ப வேண்டும்.

 • வினாக்கொத்து(Emp - 1)  » 
 • அறிவுரைகள்(IM-Emp 1)  » 
 • குறியீட்டு பட்டியல்(CL)  » 

  தொகை மதிப்பு கட்டளை 

  தொகைமதிப்பீட்டின் மூலம் யார் உள்ளடக்கப்படுவர்? 

நீங்கள் தயாரா?

தொகைமதிப்பீட்டு நாளில் வினாக்கொத்தினை நிரப்புவதற்கு முன்பாக நீங்கள் கீழே தரப்பட்டுள்ள விடயங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.

 • தேசிய அடையாள அட்டை இல.
 • வருடாந்த விடுமுறை விபரம்
 • 2015 இல் நீங்கள் எடுத்துள்ள விடுமுறை தொடர்பான விபரங்கள்.
 • கடந்த மாதம் நீங்கள் பெற்றுக்கொண்ட சம்பள விபரங்கள்.
 • அரச மற்றும் அரச சார்புத்துறை நிறுவனங்களில் நீங்கள் முதன்முதலில் இணைந்துகொண்ட திகதி.

நீங்கள் குறியீட்டினைப் பற்றி அறிந்துள்ளீர்களா?

இக்குறியீடுகள் தொடர்பாக சிறந்த அறிவை பெற்றிருப்பது அவ்வினாக்கொத்தினை நிரப்புவதை மேலும் இலகுவாக்கும்.

குறியீடுகள் » 

இங்கே வினாக்கொத்திலுள்ள ஒவ்வொரு வினாக்கள் தொடர்பானதுமான தனியான காணொளிகள் காணப்படுவதோடு, இவை நீங்கள் வினாக்கொத்தினை நிரப்புவதற்கு மிகவும் இலகுவாக இருக்கும்.


இத்தொகை மதிப்பீட்டின் போது தொழில் விபரங்கள் மட்டுமன்றி நிறுவன சொத்துக்களின் விபரங்களும் செகரிக்கப்படவுள்ளன. விசேடமாக, நிலம் வாகனங்கள் மற்றும் கட்டடங்களின் விபரங்களுக்கு மேலதிகமாக வேறு உபகரணங்களின் விபரங்களும் அவற்றின் பெறுமதிகளை அடிப்படையாக கொண்டு சேகரிக்கப்படவுள்ளன.

ஆவணங்கள்

ஒலியுடன் கூடிய காட்சி வழிகாட்டி  » 

தொகை மதிப்பீட்டில் பயன் படுத்தப்படும் ஆவணங்கள்

தொழிலாளர் கணெக்கெட்டுப்பு

வினாக்கொத்துக்கள்

சுருக்க ஆவணங்கள்

ஏனைய ஆவணங்கள்

நிறுவன சொத்துக்கள்

அரச, அரச சார்புத்துறை நிறுவனங்களில் தொழில் புரிவோர் தொகை மதிப்பு - 2016

அனைத்து அரச, அரச சார்புத்துறை நிறுவனங்களின் பணியாளர்களும் 17ம் திகதி நவம்பர் 2016ம் ஆண்டு முற்பகல் 9:30 முதல் 11:30 வரையில் நடைபெறும் நாடளாவிய ரீதியான தொகைமதிப்பீட்டில் இணைக்கப்பட்டிருப்பர்.